Theme Check

பிரபல நடிகர் கொலை வழக்கில் சிக்கிய நெருங்கிய உறவினர்!!

பிரபல நடிகர் கொலை வழக்கில் சிக்கிய நெருங்கிய உறவினர்!!

பிரபல நடிகர் கொலை வழக்கில் சிக்கிய நெருங்கிய உறவினர்!!
X

சதீஷ் வஜ்ரா கன்னட திரைப்படமான லவோக்ரி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் சதீஷின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சதீஷ் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு ஆர்ஆர் நகர் பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. வீட்டின் முன்பக்க பகுதியை சுத்தம் செய்யும் போது ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்த வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமராவை சோதனை செய்தார்.

அதில், ​நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வந்தவர்கள், சதீஷின் பைக்கையும் எடுத்துச் சென்றனர். சிசிடிவியில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Satish-Vajra

முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. சதீசை அவரது மனைவியின் சகோதரர் கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது.

அதன் அடிப்படையில் சதீசின் மனைவியின் உறவினர்களிடம் ஆர்.ஆர்.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து சதீசின் மைத்துனர் சுதர்சன், உறவினர் நாகேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

arrest

தனது சகோதரியின் தற்கொலைக்கு சதீஷ்தான் காரணம் என்று சுதர்சன் சந்தேகம் அடைந்தார். மேலும் மனைவி இறந்த பின்பு சதீஷ் அவரது குழந்தையை மனைவியின் குடும்பத்தாரிடம் விட்டு விட்டார்.

இதுதொடர்பாக சுதர்சனுக்கும், சதீசுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சதீஷ் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

newstm.in

Next Story
Share it