Theme Check

ஆசிரியையுடன் ஆசிரியர் நெருக்கம்.. போட்டோ வெளியாகி பரபரப்பு.. விசாரிக்க நீதிபதி உத்தரவு..!

ஆசிரியையுடன் ஆசிரியர் நெருக்கம்.. போட்டோ வெளியாகி பரபரப்பு.. விசாரிக்க நீதிபதி உத்தரவு..!

ஆசிரியையுடன் ஆசிரியர் நெருக்கம்.. போட்டோ வெளியாகி பரபரப்பு.. விசாரிக்க நீதிபதி உத்தரவு..!
X

மண்ணச்சநல்லூர் அருகே, வடக்கு சித்தாம்பூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவருடன் ஆசிரியர் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இதில் 258 மாணவர்கள், 281 மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 14 ஆசிரியைகள், எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்தப் பள்ளி ஆசிரியர்களில் சிலர் வகுப்பறையில் ஆபாசமாக நடந்து கொண்டதாக சில போட்டோக்கள் சமூக வலைதளத்தில் பரவின.

இதையடுத்து நேற்று, ஆசிரியை ஒருவர் ஆசிரியருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ மீண்டும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

அந்த போட்டோக்களின் உண்மை தன்மையை விசாரிக்கக் கோரி, ஆசிரியர்கள் சார்பில் முசிறி நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்து நடவடிக்கை எடுக்க, சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story
Share it