நெய் பொங்கலில் கரப்பான் பூச்சி.. பிரபல உணவகத்தில் அதிர்ச்சி !!
நெய் பொங்கலில் கரப்பான் பூச்சி.. பிரபல உணவகத்தில் அதிர்ச்சி !!

பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கப்பட்ட நெய் பொங்கலில் கரப்பான் பூச்சி கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
கடலூர் புதுநகரில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவர் நெய் பொங்கல் மற்றும் மெதுவடை பார்சல் வாங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினருடன் பொங்கல் சாப்பிட பார்சலை பிரித்தபோது பொங்கல் பார்சலில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து உடனடியாக சென்று பிரபல உணவகத்தில் கேட்டபோது, முறையாக பதில் அளிக்காமல் உணவு வாங்கிய தொகையை அவரிடம் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல உணவகத்தில் வாங்கப்பட்ட நெய் பொங்கலில் கரப்பான் பூச்சி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து கடலூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரபல உணவகத்திற்கு நேரில் சென்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பார்சல் செய்யப்பட்ட உணவில் எப்படி கரப்பான் பூச்சி வந்தது ஏன் இவ்வளவு அஜாக்கிரதையாக செயல்பட்டீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அப்போது தவறு நடந்தது உண்மையென ஊழியர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து இதுகுறித்து முறையாக பிரபல உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
newstm.in

