Theme Check

கோவை இனி எப்போதும் முதல்வரின் கோட்டை.. சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

கோவை இனி எப்போதும் முதல்வரின் கோட்டை.. சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

கோவை இனி எப்போதும் முதல்வரின் கோட்டை.. சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!
X

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாடினார். அப்போது பேசிய அவர், “வாக்களித்த மக்களை வீடுவீடாகச் சென்று பார்த்து நன்றி சொல்ல வேண்டும்.

நீங்கள் செல்லும் நேரத்தில் அவர்கள் வீட்டில் இல்லாவிட்டால் கூட, அவர்கள் வீட்டில் இருக்கும்போது சென்று சந்திக்க வேண்டும். நன்றிகளை வார்த்தைகளாக சொல்லாமல், முதல்வரின் திட்டங்கள் மூலம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “கோவையில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். இது, முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. வார்டில் உள்ள பொதுவான பிரச்னைகளின் பட்டியலை தயார் செய்து கொண்டிருக்கிறோம்.

5 ஆண்டுகளில், அதாவது முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு என்று ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டு வருகிறோம். கோவையில், சாலைப் பணிகளுக்காக முதல்வர் முதல்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளார்.

வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று வித்தியாசத்துடன் முதல்வர் மக்களை அணுகவில்லை. மற்ற மாவட்டங்களைவிட கோவைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கோவை அதிமுகவின் கோட்டை என்று மக்கள் சொல்லவில்லை. அதிமுகவுக்கு சாதகமான சிலர்தான் அப்படி கூறி வந்தனர்.

தேர்தல் வெற்றி இது யாருடைய கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. மக்கள் யாருக்கு வெற்றியை கொடுத்துள்ளனர். இனி, கோவை எப்போதும் முதல்வரின் கோட்டை. வரக்கூடிய தேர்தல்களிலும் அதைப் பார்ப்பீர்கள்” என்றார்.
Next Story
Share it