Theme Check

ஆப் மூலம் போதை மாத்திரை சப்ளை… கல்லூரி மாணவர் அதிரடி கைது!!

ஆப் மூலம் போதை மாத்திரை சப்ளை… கல்லூரி மாணவர் அதிரடி கைது!!

ஆப் மூலம் போதை மாத்திரை சப்ளை… கல்லூரி மாணவர் அதிரடி கைது!!
X

போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு ஆப் மூலம் சப்ளை செய்த கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர் ஒருவர் மூலம் வசதியானோர், கல்லூரி மாணவர்கள், நடிகர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா சப்ளை செய்யும் நபர் பற்றி சென்னை தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தனிப்படையினர் கல்லூரி மாணவர் ஒருவர் உதவியுடன் அதிநவீன போதை மருந்து சப்ளை செய்யும் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து போதைப் பொருட்கள் விற்பனையை கண்டுபிடித்தனர்.

தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவா (24) என்பவர் அந்த குரூப்- நடத்தி வந்துள்ளார். இவர் கூடுவாஞ்சேரி அருகில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் அங்கு படிக்கும் காலத்தில் இவருக்கு போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

drug

அவரது பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதன்பின் டெல்லி சென்ற அவர் அங்கு பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அதன் மூலம் ரகசியமாக உயர்ரக போதை மாத்திரைகள் மற்றும் உயர்ரக கஞ்சா விற்கும் நண்பர்களோடு தொடர்பு ஏற்பட்டது.

இவர் தனியாக ஒரு ஆப் ஏற்படுத்தி அதில் கஞ்சா போதை மாத்திரைகள் கேட்பவர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பியுள்ளார். இதனால் போலீஸாரால் இவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழலில், ரகசிய தகவல் மூலம் ஜீவா போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

அவரிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளும் உயர்ரக கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Next Story
Share it