Theme Check

கல்லூரி மாணவி கொடூரமாக கொலை.. இளைஞருக்கு போலீஸ் வலை..!

கல்லூரி மாணவி கொடூரமாக கொலை.. இளைஞருக்கு போலீஸ் வலை..!

கல்லூரி மாணவி கொடூரமாக கொலை.. இளைஞருக்கு போலீஸ் வலை..!
X

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

முருகேசன், கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள சின்னசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து குடும்பத்துடன் தோட்டத்தில் தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த நீலகிருஷ்ணன் மகன் சாமிதுரை. இவர், கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரை வீட்டுக்கு சென்றபோது மாணவி ரோஜாவை பார்த்துள்ளார்.

அப்போது மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி மாணவியின் ஊருக்கு சென்ற சாமிதுரை, பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது மாணவியை காதலிக்க வலியுறுத்தி கட்டாயப்படுத்தியுள்ளதோடு திருமணம் செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் மாணவியின் உறவினர்களுக்கு தெரியவந்ததால் ஊரின் முக்கிய நபர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜா வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு தோட்டத்திற்கு சென்று வீட்டின் பின்புற பகுதியில் பதுங்கி இருந்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ரோஜாவை, என்னை காதலித்து திருமணம் செய்துகொள்; இல்லையென்றால், உன்னை கொன்று விடுவேன் எனக் கூறியுள்ளார்.

இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சாமிதுரை மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ரோஜா மீது ஊற்றியுள்ளார்.

பின்னர் ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்து கல்லை தூக்கி தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

மயங்கிய நிலையில் கிடந்த ரோஜாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரோஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தப்பி ஓடிய சாமிதுரையை 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story
Share it