Theme Check

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொலை!?

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொலை!?

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொலை!?
X

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நொச்சிவயல் புதூரை சேர்ந்த வித்யாலட்சுமி என்ற மாணவி பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

வித்யாலெட்சுமியை ஒரு மாதமாக பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், தனது காதலை தெரிவித்ததாகவும், அதை ஏற்க மறுத்த வித்யாலெட்சுமி, அந்த நபரை செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மறுநாள் மாணவியை வழிமறித்த, ஒருதலைக்காதல் நபர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள், விஷம் கலந்த குளிர்பானத்தை, வித்யாலெட்சுமியை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

trc1

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட வித்யாலெட்சுமி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வித்யாலெட்சுமி தாயார், பெல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், பெல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வித்யாலெட்சுமியை கொலை செய்த மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வித்யாலெட்சுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று வித்யாலெட்சுமி உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக துவாக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த கிஷோர் () கரண் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it