நேதாஜியுடன் வந்து வேட்புமனு தாக்கல்.. கவனம் ஈர்த்த கோவை வேட்பாளர்..!
நேதாஜியுடன் வந்து வேட்புமனு தாக்கல்.. கவனம் ஈர்த்த கோவை வேட்பாளர்..!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 28-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்ற நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அதுவும், சுயேட்சை வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கோவையின் போத்தனூர் 95-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ராஜசேகர்.
நாட்டின் பெரும் தலைவர்களாகிய நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் சேர்ந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் ராஜசேகரின் வித்தியாசமான முறை அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.

