Theme Check

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு..!! பிளேடால் கைகளை வெட்டி ரகளை செய்த வாலிபர்..

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு..!! பிளேடால் கைகளை வெட்டி ரகளை செய்த வாலிபர்..

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு..!! பிளேடால் கைகளை வெட்டி ரகளை செய்த வாலிபர்..
X

சென்னை, பெரும்பாக்கம், வள்ளுவர் நகர், 13 வது தெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட் ராஜ் (29). இவரது அண்ணன் ஜோதி பாசுவை, அதேபகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஜோதி பாசு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

knife

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணனை பார்க்க, நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனைக்கு, ஆனஸ்ட் ராஜ் வந்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த அவர் அங்கு கத்தி கூச்சலிட்டார். அதையடுத்து ஜோதி பாசு மனைவி பிரியா, மருத்துவமனையில், போதையில் கத்த கூடாது என்று ஆனஸ்ட் ராஜிடம் கூறியுள்ளார்.

சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 4 போலீசார், ஆனஸ்ட் ராஜிடம் இங்கு சத்தம் போட கூடாது என கூறி மருத்துவமனையை விட்டு வெளியேற்றினர். இந்த நிலையில், இன்று காலை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள், அனஸ்ட் ராஜ் அத்து மீறி நுழைந்த அவர், திடீரென தனது உடலில் பிளேடால் வெட்டி கூச்சல் போட்டார். கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக பிளேடால் வெட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

commissioner-office

இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஆனஸ்ட் ராஜை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ஸ்டான்லி மருத்துவமனையில், போலீசார், என் பணம் ரூ,15 ஆயிரத்தை பிடுங்கி விட்டனர். அந்த பணம் வேண்டும் என கூறினார். இந்த சம்பவத்தால், கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
Share it