Theme Check

நடிகர் விஜய் மீது டிஜிபியிடம் புகார்!!

நடிகர் விஜய் மீது டிஜிபியிடம் புகார்!!

நடிகர் விஜய் மீது டிஜிபியிடம் புகார்!!
X

தமிழ் திரைப்பட உலகின் தற்போதைய உச்ச நட்சத்திரம் நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

வெளிவருவதற்கு முன்பே பெரும் வரவேற்பைப் பெற்ற பீஸ்ட் படம் தொடர்பாக சர்ச்சையும் உருவாகத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஏதோ ஓரிடத்தில் பீஸ்ட் படத்திற்காக விஜய் ரசிகர்கள் கட்வுட் வைத்துள்ளனர்.

vijay

அந்த கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வதற்காக இளைஞர் ஒருவர் 25 லிட்டர் கேனில் பாலை ஒற்றைக் கையில் துாக்கி மேலே ஏறும் காட்சி பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி, இதுகுறித்து தமிழக டிஜிபி சென்னை மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளிடம் ஒரு புகாரளித்துள்ளார்.

vijay

அதில், நடிகர்களுக்கு பெரிய பெரிய கட்டவுட்டுகள் வைப்பதோடு கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் இளைஞர்கள் பாலபிஷேகம் செய்வதும், மாலை போடுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதனால் தியேட்டர்கள், பொது இடங்களில் நடிகர்களுக்கு கட்டவுட்டுகள் வைப்பதையும், மாலை, பாலபிஷேகம் என்ற பெயரில் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதையும் தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it