இன்று முதல் கட்டாயம்….. இல்லன்னா அபராதம்…. அரசு கடும் உத்தரவு..!!
இன்று முதல் கட்டாயம்….. இல்லன்னா அபராதம்…. அரசு கடும் உத்தரவு..!!

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களான சென்னை, வேலூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிடம் மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Next Story

