ஒரே பெண்ணை காதலிப்பதில் மோதல்.. நண்பனை கத்தியால் குத்திய இளைஞர்
ஒரே பெண்ணை காதலிப்பதில் மோதல்.. நண்பனை கத்தியால் குத்திய இளைஞர்

ஒரே பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்த நிலையில், இதில் நண்பனை கத்தியால் குத்தி கொலைசெய்ய முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (21). இவர் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அதே பெண்ணை சந்தோஷ்குமாரின் நண்பரான சரண், ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார் சரண்.
இதுகுறித்து சந்தோஷ்குமாரிடம் அவரது காதலி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் கோடம்பாக்கம் புலியூர் பகுதியில் சரணை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டத்தில் சரணை கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். எனினும் சந்தோஷ்குமார் அப்பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ர். இதனிடையே, வீட்டிற்கு சென்ற சரண், ஆத்திரத்தில் நீளமான கத்தியை எடுத்து வந்து சந்தோஷ்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.
இதில் படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரணை கைது செய்தனர். கத்துக்குத்தில் காயமடைந்த இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
newstm.in

