ஆர்ஆர்ஆர் பட இயக்குநர் ராஜமெளலியுடன் மோதல்.. நடிகை அலியா பட் விளக்கம் !!
ஆர்ஆர்ஆர் பட இயக்குநர் ராஜமெளலியுடன் மோதல்.. நடிகை அலியா பட் விளக்கம் !!

பிரபல இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ரூ.400 கோடி தயாரிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், நடிகை அலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ளளனர். இதில், நடிகர்கள் இருவரையும் மாஸாக காட்டிய இயக்குனர் ராஜமெளலி, நடிகை அலியா பட் நடித்த காட்சிகளை சுருக்கி விட்டதாக கூறபட்டது. அதாவது, அலியா பட் எங்கே என தேடும் அளவுக்கே படத்தில் அவரது கதாபாத்திரம் சிறிதாக வந்து சென்றது.

இது அலியா பட் ரசிகர்களை மட்டுமின்றி அலியா பட்டையும் ரொம்பவே கோபத்தில் இருப்பதாக கூறபட்டது. ஏனெனில், அலியா பட்-க்கு தென்னிந்திய திரையுலகில் 'ஆர்ஆர்ஆர்' முதல் படம். ஆனால், இதில் அவர் எதிர்பாராத்ததுபோல் பெரிய கதாபாத்திரம் இல்லை. இதனால் கோபத்தில் இருந்த நடிகை அலியா பட் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த போஸ்டர்களையும், வீடியோக்களையும் தூக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. மேலும் ராஜமெளலியை பின்தொடர்வதையும் நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இதனை அலியாபட் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறி இருப்பதாவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்செயலான ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அனுமானங்களைச் செய்ய வேண்டாம் என்று அனைவரையும் நான் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் எனது சுயவிவரக் கட்டத்திலிருந்து பழைய வீடியோ இடுகைகளை மறுசீரமைப்பேன், ஏனெனில் அது ஒழுங்கீனமாக இல்லாமல் இருப்பதை நான் விரும்புகிறேன்.

ஆர்ஆர்ஆர் படத்தில் நான் ஒரு பகுதியாக இருந்ததற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் சீதாவாக நடித்ததை விரும்பினேன், நான் ராஜமெளலி சாரால் இயக்கியதை விரும்பினேன் . ஜூனியர் என்டிஆர்மற்றும் ராம்சரண் ஆகியோருடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் எனது அனுபவத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் விரும்பினேன், என கூறி உள்ளார்.
newstm.in

