Theme Check

குழப்பத்தில் பெற்றோர்.. சீக்கிரமா தொறங்க.. அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!

குழப்பத்தில் பெற்றோர்.. சீக்கிரமா தொறங்க.. அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!

குழப்பத்தில் பெற்றோர்.. சீக்கிரமா தொறங்க.. அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!
X

“அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கப்படும் என்பது தெரியாததால் பெற்றோர் குழப்பமாக உள்ளனர்” என, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 2381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை.

இதனால், பெற்றோர் கவலை அடைந்துள்ள நிலையில், இந்த முக்கியமான விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை அலட்சியம் காட்டுவது மிகவும் கவலை அளிக்கிறது.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2381 அரசுப் பள்ளிகளில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கேஜி வகுப்புகள் மூடப்படுவதாக கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது.

அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மழலையர் வகுப்புகள் அரசு பள்ளிகளுக்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

ஆனால், அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

அதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதற்காக 2,500 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் கடந்த 9-ம் தேதி பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்தார்.

ஆனால், அதன்பின் 19 நாட்களாகி விட்ட நிலையில், 2381 அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இன்னும் மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை.

பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13-ம் தேதி அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் இரு வாரங்களாகியும் மழலையர் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

அதனால், அந்தப் பருவத்தில் அவர்களுக்கு முறைசார்ந்த கல்வி வழங்குவது அவசியம் ஆகும். இதை உணர்ந்து அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

ஒரு வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளைத் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
Share it