Theme Check

குவியும் வாழ்த்துக்கள்..!! மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு!!

குவியும் வாழ்த்துக்கள்..!! மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு!!

குவியும் வாழ்த்துக்கள்..!! மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு!!
X

மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 29-ம் தேதியுடன் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் இந்த தேர்தல் அறிவிப்பு வெளியானது.

Indian Parliament

சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் திமுகவுக்கு மாநிலங்களவையில் 4 உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. அதேபோன்று அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் உள்ளன. திமுக சார்பில், தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மொத்தம் உள்ள 4 உறுப்பினர்களில் திமுக சார்பில் 3 பேரும், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

Election commission

இந்த நிலையில், இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் கடந்த 1.6.2022 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 6 வேட்பாளர்களின் 11 வேட்புமனுக்கள் செல்லத்தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அளித்த வேட்பாளர்கள் எவரும் தங்களது வேட்புமனுக்களை நேற்று (ஜூன் 3) 3 மணிக்குள் திரும்பபெறவில்லை.

1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 53/2- ன்படி, திமுகவைச் சேர்ந்த சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார், அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

Next Story
Share it