Theme Check

வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்!

வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்!

வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்!
X

தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

முன்னதாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tamilnadu-minister

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தமிழ்நாட்டு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. அன்பு தான் எல்லாம் என்றிருக்கும் இந்த உலகில் அன்பைப் பரிமாறி கொள்ளத்தான் அன்பு மூலம் உங்களுக்கு நன்றி சொல்ல தான் முதல்வர் எங்களை இங்கு அனுப்பினார்” என்று தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “மறைசாட்சியை வேதசாட்சியாக அறிவிக்க கூடிய இடத்தில் இருக்கும் புனிதர், எங்கள் வீட்டிற்கு அருகே பிறந்து வாழ்ந்து மறை சாட்சியாக எய்தியவர். போப் ஆண்டவர் கலந்து கொண்ட ஆலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளோம்” என்றார்.

இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

Next Story
Share it