Theme Check

தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!!

தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!!

தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!!
X

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தலில் ரேவா மாவட்டத்தில் ஹனுமனா நகர் பகுதி 9 வார்டு கவுன்சிலர் பதவிக்காக காங்கிரஸ் சார்பில் 45 வயதான ஹரி நாராயணன் குப்தா போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த ஹரி நாராயணன் குப்தாவுக்கு காலை 11 மணி அளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் அவர் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், ஹரி நாராயணன் குப்தாவை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் அகிலேஷ் குப்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Harinarayan_Gupta

தனது தோல்வி செய்தியை அறிந்த ஹரிநாராயணன் குப்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நிலை தவறி கீழே விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹரிநாராயணன் குப்தா காங்கிரஸ் கட்சியின் மண்டல் தலைவராக இருந்தார். இந்த மண்டலத்தில் மொத்தம் உள்ள 15 இடங்களில் 8இல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

முதற்கட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவில் 11 நகராட்சி கார்பரேஷன்களில் 7 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. மூன்று இடங்களை காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தை ஆம் ஆத்மி கட்சியும் கைப்பற்றியுள்ளது.

newstm.in

Next Story
Share it