#BREAKING:- அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்தது காங்கிரஸ்..!
#BREAKING:- அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்தது காங்கிரஸ்..!

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், “அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்ட சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. விவாதிக்காமல் அமைப்பு ஏற்படுத்திவிட்டு, அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது.
எனவே, சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை” என மு.க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சோனியா காந்தி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் இணைவதாகவும், காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமனம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

