Theme Check

திமுகவால் தான் காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.. அதிர வைத்த அண்ணாமலை..!

திமுகவால் தான் காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.. அதிர வைத்த அண்ணாமலை..!

திமுகவால் தான் காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.. அதிர வைத்த அண்ணாமலை..!
X

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவருடைய சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: “தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. நேர்மையான முறையில் மக்களை சந்தித்து தமிழகத்திலும் நிச்சயம் ஆட்சி அதிகாரத்துக்கு வருவோம்.

மகாராஷ்டிராவில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானது போல தமிழகத்திலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்று தான் நான் சொல்லி உள்ளேன்.

ஏக்நாத் ஷிண்டேவை நாங்கள் உருவாக்குவோம் என்று நான் கூறவில்லை. குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களில் இதுதான் நிலைமை.

பாரதிய ஜனதா கட்சி எந்த தனிமனிதனையும் நம்பி இல்லை. புதியவர்கள் பலர் இந்த கட்சியில் உருவாவார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையில் பிரிந்து கிடக்கிறது. அதற்கான பெவிகுயிக்கை வாங்கி கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழக காங்கிரஸ் ஐ.சி.யூ.வில் உள்ளது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் போக மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடனே ஒட்டிக்கொண்டுள்ளது.

திமுக கொடுக்கும் ஆக்சிஜன் மூலம்தான் காங்கிரஸ் உயிர் வாழ்கிறது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 24 எம்.பி.க்களை பாரதிய ஜனதா கட்சி பெறும். இதை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

Next Story
Share it