Theme Check

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும்..!!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும்..!!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும்..!!
X

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக மட்டுமே பொதுத்தேர்வு நடந்த நிலையில் நடப்பு ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 23-ம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ள நிலையில் ரிசல்ட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

engg-couns

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்விற்கு வருகிற 20-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ஜூன் 20 முதல் ஜூலை 19-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட்16-ம் தேதி தொடங்கும் எனவும் ஆகஸ்ட் 22 முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Ponmudi

தொடரந்து பேசிய அவர், இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூலை 19-ம் தேதி கடைசி நாள் என்றும் ஆகஸ்ட் 8-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டு 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறிய அமைச்சர், 7.5 சதவீத இட ஒதுக்கீடில் படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22லும் கவுன்சிலிங் துவங்கும் என்று கூறினார்.

நீட் நுழைவுத் தேர்வு முடிவு வந்த பிறகு தான் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கும் என்றும் முதல் 15 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் 7 நாட்களில் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it