Theme Check

கப்பலில் கண்டெய்னர் வெடித்து 40 பேர் உயிரிழப்பு!!

கப்பலில் கண்டெய்னர் வெடித்து 40 பேர் உயிரிழப்பு!!

கப்பலில் கண்டெய்னர் வெடித்து 40 பேர் உயிரிழப்பு!!
X

வங்கதேசத்தில் கப்பல் கண்டெய்னரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சிட்டகாங்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் கண்டெய்னரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியே நெருப்பு மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதற்குள் தீயின் தாக்கம் தீவிரமடைந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு சட்டாகிராம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

bangladesh-fire1

கண்டெய்னர்களில் கெமிக்கல் பொருள்கள் இருந்ததாக தெரிகிறது. இந்த விபத்து காரணமாக அருகே இருந்த வசிப்பிடங்கள், வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. வெடிவிபத்தில் வானில் இருந்து நெருப்பு மழை பொழிவது போல தோன்றியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சிகிச்சையில் உள்ள பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

newstm.in

Next Story
Share it