Theme Check

தொடர் வயிற்று வலி.. காவலர் எடுத்த விபரீத முடிவு !!

தொடர் வயிற்று வலி.. காவலர் எடுத்த விபரீத முடிவு !!

தொடர் வயிற்று வலி.. காவலர் எடுத்த விபரீத முடிவு !!
X

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது தாதகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). இவர் காவலர் பணிக்கு தேர்வு ஆனார். தற்பொழுது திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலருக்கான பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென சுபாஷ் அதிக அளவில் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பயிற்சி பள்ளியில் இருந்ததால் சக போலீசார் அவரை மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

police

தற்பொழுது அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த விசாரணையில், பயிற்சி காவலர் சுபாஷ் குடலிறக்கம் நோய் காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் வலி தாங்காமல் மனமுடைந்த சுபாஷ் அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


newstm.in

Next Story
Share it