தொடரும் கௌரவம்.. அமெரிக்காவின் பெடெக்ஸ் சிஇஓ-வாக இந்தியர் நியமனம் !!

தொடரும் கௌரவம்.. அமெரிக்காவின் பெடெக்ஸ் சிஇஓ-வாக இந்தியர் நியமனம் !!

தொடரும் கௌரவம்.. அமெரிக்காவின் பெடெக்ஸ் சிஇஓ-வாக இந்தியர் நியமனம் !!
X

சமீப காலமாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் உயர் பதவியில் நியமிக்கப்படுவது தொடர்கிறது. அந்த வரிசையில் தற்போது ராஜ் சுப்ரமணியமும் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசஅளவில் பிரபலமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ராஜ்சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பதவியில் இருந்த நிறுவனர் பிரெட் ஸ்மித், பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் பிறந்து மும்பை ஐஐடியில் பயின்றவர். இவர் தனது பணிக்காலத்தை பெடெக்ஸில்தான் தொடங்கினார். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஐஐடிமும்பையில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர்.

fedex-ceo-of-america

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 5 நிறுவனங்களில் பெடெக்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் 6.5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். சமீபத்தில் ஐபிஎம் நிறுவனத் தலைமைப் பொறுப்புக்கு அரவிந்த்கிருஷ்ணா, ட்விட்டர் நிறுவனத்துக்கு பராக் அகர்வால், சேனல் நிறுவனத்துக்கு லீனா நாயர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் மிகப் பெரும் சூப்பர்மார்க்கெட் சங்கிலித் தொடர் நிறுவனமான ஆல்பர்ட்சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரியாக விவேக் சங்கரன் பொறுப்பேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it