Theme Check

தொடர்ந்து முகூர்த்த நாள்.. பூக்களின் விலை கடும் உயர்வு..!

தொடர்ந்து முகூர்த்த நாள்.. பூக்களின் விலை கடும் உயர்வு..!

தொடர்ந்து முகூர்த்த நாள்.. பூக்களின் விலை கடும் உயர்வு..!
X

தொடர்ந்து முகூர்த்த நாள் என்பதால், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை உயர்ந்து ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்றைய தினம் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு 600 முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், இன்று 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதே போல் முல்லை மற்றும் பிச்சிப் பூக்கள் கிலோ 500 ரூபாய்க்கும், சம்பங்கி, பட்டன் ரோஸ் பூக்கள் கிலோ 150 ரூபாய்க்கும், செண்டு மல்லி 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நாளை (9-ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (10-ம் தேதி) முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it