Theme Check

தொடரும் துயரம்.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!

தொடரும் துயரம்.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!

தொடரும் துயரம்.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!
X

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக மேட்டூரை சேர்ந்த விஜயகுமார் (47) பணிபுரிகிறார்.

இவர், அங்கு பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாகவும், அவரது அறைக்கு வரச் சொல்லி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், மற்ற மாணவ - மாணவியரின் பெற்றோருடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா மற்றும் போலீசார், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் 10க்கும் மேற்பட்ட சக மாணவியரிடம் விசாரித்தனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, கல்வித்துறை அதிகாரிகள் மாணவியர், பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, பள்ளியில் தனி அறையில் வைத்து ஆசிரியர் விஜயகுமாரிடம் இரண்டு மணி நேரம் போலீசார் விசாரித்தனர். அதன் பின்னர், 'போக்சோ' சட்டத்தில் அவரை கைது செய்தனர்.

Next Story
Share it