சர்ச்சையில் சிக்கியுள்ள பீஸ்ட் பட நடிகர் – ரசிகர்கள் கொந்தளிப்பு!!
சர்ச்சையில் சிக்கியுள்ள பீஸ்ட் பட நடிகர் – ரசிகர்கள் கொந்தளிப்பு!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியான அன்றே, விமர்சன ரீதியாக பெரிதும் அடிவாங்கியது.
இதனால் இந்த படத்தை, நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், படத்தில் வில்லனுக்கு உதவியாக இருக்கும் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த ஷைன் டாம் சாக்கோ, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் ‘பீஸ்ட்’ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பீஸ்ட்’ படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல என்ட்ரி இல்லை என்றும், தான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை என்றார்.

ஆனால் troll-கள் பார்த்திருக்கிறேன் என்று நக்கலாக பதிலளித்திருந்தார். மேலும் அந்த படத்தில், விஜய் டாம் ஷைனை கயிற்றால் கட்டித் தூக்கி வருவார். அது தொடர்பான காட்சி பற்றி சாக்கோ பேசியுள்ளார்.
ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கி வரும் நபரின் முகத்தில் ரியாக்சன் இருக்க வேண்டும். ஆனால், படத்தில் ஏதோ ஒரு பேப்பரை தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார் என்று விமர்சித்துள்ளார்.
இவரின் இந்த கருத்து விஜய் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

