Theme Check

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் கூகுள் நிறுவனம்!!

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் கூகுள் நிறுவனம்!!

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் கூகுள் நிறுவனம்!!
X

ஆண்களை விட பெண்களுக்குக் குறைவான ஊதியம் குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இது உண்மை என்று ஒரு சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது.

கலிஃபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கடந்த 2013ம் ஆண்டு 15,500 பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களும், பெண்களும் ஒரே பதவியில் இருந்தபோதும் கூட இந்த ஊதியப் பாகுபாடு இருந்துள்ளது.

google

இது குறித்து பெண் ஊழியர்கள் சிலர் நிர்வாகத்திடம் முறையிட்டும், உரியப் பதில் கிடைக்கவில்லை. இதனால் வேலையை விட்டுச் சென்ற முன்னாள் ஊழியர்கள் சிலர் 2017ம் ஆண்ட கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை ஐந்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், ஊதிய பாகுபாடு காட்டப்பட்ட அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 118 மில்லியன் டாலர் (இந்திய மதிப்புப்படி ரூ.920 கோடி) இழப்பீட்டை வழங்குவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it