Theme Check

இஸ்லாமிய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து… சாமியார் மீது வழக்குப்பதிவு!!

இஸ்லாமிய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து… சாமியார் மீது வழக்குப்பதிவு!!

இஸ்லாமிய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து… சாமியார் மீது வழக்குப்பதிவு!!
X

இஸ்லாமிய பெண்களை கடத்தி பொதுவெளியில் பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று பேசிய குற்றச்சாட்டில் சாமியார் பஜ்ரங் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கைராபாத் பகுதியைச் சேர்ந்த மகந்த் பஜ்ரங் தாஸ் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சீத்தாப்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ஊர்வலமாக சென்றார்.

அப்போது வழியில் மசூதி அருகே தனது வாகனத்தை நிறுத்தி இஸ்லாமிய பெண்களை அச்சுறுத்தும் விதமாக வெறுப்பு பேச்சு மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.

up

அவரது பேச்சுக்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி, ஆராவாரம் செய்து, ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் உத்தரப் பிரதேச டிஜிபி ராகேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதியது.

இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேச காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது. இந்நிலையில் அவர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


newstm.in

Next Story
Share it