Theme Check

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து.. அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி !

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து.. அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி !

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து.. அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி !
X

மாநில உள்துறை அமைச்சர் பெண்கள் குறித்து பேசிய பேச்சு வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான, திலீப் வால்ஸ் பாட்டீல் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது தெரிவித்த அவரது கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவரது பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பாட்டீல், மராத்தியில் பேசுகிறார். அவர் கூறியதாவது, ஆண்கள் வீட்டிற்கு வெளியிலும், பெண்கள் வீட்டு வேலையையும் செய்து கொண்டிருந்தால், குடும்பத்தில் வன்முறையை தவிர்க்கலாம், நல்ல திருமணங்கள் அப்படி தான் இருக்கும், என்னும் பொருள்பட பேசினார்.

dsa

பெண்களை தாழ்த்தி பேசிய பாலியல் ரீதியான அவருடைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் உடனே பதவி விலகவேண்டும் என்றும் ஒருசிலர் கூறியுள்ளனர். எனினும், இந்த வீடியோ மீதான விமர்சனங்களுக்கு அவர் இதுவரை பதிலளிக்கவில்லை.


newstm.in

Tags:
Next Story
Share it