சர்ச்சை! சரும பிரச்னை விளம்பரத்தில் பிரபல நடிகரின் ஃபோட்டோ!!
சர்ச்சை! சரும பிரச்னை விளம்பரத்தில் பிரபல நடிகரின் ஃபோட்டோ!!

கேரளாவில் சருமப் பிரச்னை தீர்வுக்கான விளம்பரத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் படத்தை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் வடக்கரா கூட்டுறவு மருத்துவமனை வெளியிட்டிருந்த விளம்பரப் பதாகையில் மரு, தோல் குறிகள், மிலியா உள்ளிட்ட சருமப் பிரச்னைகளைத் தீர்க்க சிகிச்சை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த விளம்பரப் பதாகையில், ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் கூறுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் மருத்துவமனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த விளம்பர பலகை நீக்கப்பட்டு, தவறுக்கு மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. உள்ளூரில் உள்ள வடிவமைப்பாளர் ஒருவர் அதனை வடிவமைத்திருந்தார்.
புரிதலோ, ஆழ்ந்த அறிவோ இல்லாத காரணத்தால், இந்த விளம்பரப் பதாகை மருத்துவமனையில் வாசலில் வைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sir, .@morgan_freeman your picture is used as a poster at a dermatology department advt board in hospital in Kerala, India.
— Rejimon Kuttappan (@rejitweets) January 31, 2022
Using your picture as sample, they are claiming to make everyone free from dark tan, wrinkles, pigments.... pic.twitter.com/54plREcswi
மார்கன் ஃப்ரீமேன் மிகச் சிறந்த நடிகர் என்பதையும், உலகில் அவரை ரசிக்கும் பலரும் இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்கள் தரப்பில் அறிவுக் குறைப்பாட்டால் ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு மனதார மன்னிப்பு கோருகிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
newstm.in

