Theme Check

சர்ச்சை... ஆண்கள் கழிவறைக்கு தோனி ஃபோட்டோ!!

சர்ச்சை... ஆண்கள் கழிவறைக்கு தோனி ஃபோட்டோ!!

சர்ச்சை... ஆண்கள் கழிவறைக்கு தோனி ஃபோட்டோ!!
X

மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை என்றாலே திருமண விழா, காதுகுத்து விழா, நடிகர் நடிகையர் பிறந்தநாள், அரசியல் தலைவர்கள் பிறந்தநாள், என அனைத்துக்கும் வினோதமாக போஸ்டர், பேனர் அடித்து மாஸ் காட்டி அதிரவைத்து விடுவார்கள்.

எந்த விழாவாக இருந்தாலும், பேனரிலும், ஒட்டும் போஸ்டரிலும் கற்பனைகள் புகுந்து விளையாடும். திருமண வாழ்த்து போஸ்டர், விஜய், அஜித் ரசிகர்களின் போஸ்டர் என பல போஸ்டர் தமிழக அளவில் பயங்கர பேமஸ் ஆவது வாடிக்கை.

அண்மையில் கூட மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்கா வளாகத்திற்குள் வைக்கப்பட்ட பேனர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில்நாய் காதல்செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து அறிவிப்பு பலகை வைத்தது பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

Madurai dhoni

கடும் விமர்சனத்தை தொடர்ந்து, நாய் காதல் செய்யாதீர்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய பேனரை பூங்கா நிர்வாகம் நீக்கியது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அதர்ச்சியடைந்தவர்கள் சமூகவலைதளத்தில் புகைப்படமாக வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it