பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ட்வீட்டால் சர்ச்சை..!!
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ட்வீட்டால் சர்ச்சை..!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த சூழலில், இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் காவல் துறையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா தனது ராணுவத்தை கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தற்போது, மக்களின் கோபத்தை இந்திய எதிர்ப்பு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
India must send in the Indian Army to restore Constitutional sanity. At present anti Indian foreign forces are taking advantage of people’s anger. This affects India’s national security
— Subramanian Swamy (@Swamy39) May 10, 2022

