மதமாற்றம் சர்ச்சை : அரசுப்பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்!!
மதமாற்றம் சர்ச்சை : அரசுப்பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்!!

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்து 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், மாணவிகளிடம் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து மாணவிகள், தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். மாணவிகளின் பெற்றோர், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர். இந்த நிலையில், தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய அரசு ஆசிரியை தற்காலி பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் உத்தரவிட்டுள்ளா்.
newstm.in

