குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம்.. பொண்ணு பேரு பென்சியாம்..!
குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம்.. பொண்ணு பேரு பென்சியாம்..!

விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் புகழ். தற்போது அவர், கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சந்தானத்தின் ‘சபாபதி’, அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் புகழ். மேலும், அஜித்தின் ‘வலிமை’, அருண் விஜய்யின் ‘யானை’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், புகழ் ஒரு பெண்ணை காதலிப்பது சமீபத்தில்தான் வெளியுலகுக்கு தெரிய வந்தது. தன் காதலிக்கு அவர் இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை பார்த்துதான் புகழுக்கு காதலி இருப்பது தெரிந்தது.
இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ 3 ப்ரோமோவில் புகழ் கூறியிருப்பதாவது, “என் காதலியின் பெயர் பென்சி. நாங்கள் 5 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருக்கிறோம்.
‘கலக்கப் போவது யாரு’ ஆடிஷன் நடந்தபோதில் இருந்தே பென்சியை தெரியும். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை பார்த்து என்னை ஊக்குவித்தார். நாங்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வோம்” என்றார்.

