சமையல் எண்ணெய் விலை 2 மடங்கு உயர்வு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!
சமையல் எண்ணெய் விலை 2 மடங்கு உயர்வு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 43 நாட்களாகிவிட்டன. உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தொடர்ந்து தீவிர சண்டை நீடித்து வருகிறது. போரை கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் நாடு அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது.
அந்த நாட்டில் இருந்து இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் சூரியகாந்தி எண்ணெய் வினியோகிக்கப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் சூழலால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், போருக்கு முன்னர் 100 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், தற்போது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

