Theme Check

சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு!!

சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு!!

சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு!!
X

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் ( ரீஃபைண்ட் ஆயில் ) 70 சதவிகிதம் உக்ரைனில் இருந்தும் 20 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்தும் தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்பொழுது அங்கு போர் நீடித்து வருவதால் சமையல் ரீபைண்ட் ஆயில், பாமாயில், கடலெண்ணெய் போன்றவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் டின் உக்ரைன் போருக்கு முன்பு 2,150 க்கு விற்பனையானது.

oil

ஆனால் தற்பொழுது ரூ 2,525 க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் ரூ.130க்கு விற்பனை ஆனது. தற்பொழுது ரூ.160 க்கு விற்பனையாகிறது, லிட்டருக்கு 30 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாமாயில் எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட பாமாயில் டின் ரூ 1,900க்கு விற்பனையானது ஆனால் தற்பொழுது ரூ.2,350 க்கு விற்பனையாகிறது.

war1

சில்லரையில் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.115 க்கு விற்பனையானது. ஆனால் தற்பொழுது ரூ.145 க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய கடலை எண்ணையும் முன்பு ரூ 2,400 விற்பனையான நிலையில் தற்போது ரூ.2,600 க்கு விற்பனையாகிறது.

போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே சமையல் எண்ணெய்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் இல்லையென்றால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it