#BREAKING:- விரைவில் அகவிலைப்படி உயர்வு.. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உறுதி..!
#BREAKING:- விரைவில் அகவிலைப்படி உயர்வு.. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உறுதி..!

தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கூட்டுறவுத் துறை அதிகாரிகள், ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

தமிழக அரசு, ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. ஆனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காமல், கூட்டுறவு துறை நிறுத்தி வைத்துள்ளது. இது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், பதிவாளர் சண்முகசுந்தரம், அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விரைவில் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

