Theme Check

கொரோனா 4ஆவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய மாநகராட்சி !!

கொரோனா 4ஆவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய மாநகராட்சி !!

கொரோனா 4ஆவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய மாநகராட்சி !!
X

நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கை முறையை ஆட்டிபடைத்த கொரோனா எனும் பெருந்தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது. ஆனால் சில நாடுகளில் நான்காம் அலை பரவியது. இந்தியாவில் மூன்று அலை கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அடுத்துஎப்போது என்ற அச்சம் இருந்துகொண்டே தான் உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா அதிகரித்து பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி 4ஆம் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பாகும்.

corona

இதன் மூலம் மும்பையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை. கொரோனா அதிகரிப்பை அடுத்து மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சகால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா 4ஆவது அலை வருகிற ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணித்து உள்ளனர். அவர்களது முந்தைய எச்சரிக்கை பலித்து உள்ளது. எனவே தற்போதைய அவர்களது இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமீப நாட்களாக கொரோனா அதிகரித்து வருவதை பார்க்கும்போது 4ஆவது அலை வரும் வாய்ப்பை மறுத்து விட முடியாது.

corona

4ஆவது அலை மற்றும் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மும்பையில் தற்போது 8 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பாதிப்பு விகிதம் 8 சதவீதமாக அதிகரித்து உள்ளது. தினமும் 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். கொரோனா பரிசோதனை அறிக்கையை முதலில் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகே சோதனை செய்தவர்களுக்கு அனுப்பவேண்டும். விதிமுறையை மீறும் ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it