Theme Check

தமிழக முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா உறுதி..!

தமிழக முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா உறுதி..!

தமிழக முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா உறுதி..!
X

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,466 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களின் நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ADMK Leaders Kadampur Raju and Dhanapal Tested Positive for Coronavirus | முன்னாள்  அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
Share it