Theme Check

பீர் குடிப்பதால் கொரோனா வரும்… அதிர்ச்சி தகவல்!!

பீர் குடிப்பதால் கொரோனா வரும்… அதிர்ச்சி தகவல்!!

பீர் குடிப்பதால் கொரோனா வரும்… அதிர்ச்சி தகவல்!!
X

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே கதிகலங்க செய்து கொண்டிருக்கும் கொரோனாவையும், மதுவையும் சேர்த்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த இதழ் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வாரத்துக்கு 1 - 4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவது, கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைகள் இந்த ஒயினை அருந்துவதால் கொரோனா 17 சதவீதம் அளவுக்கும் மனிதனுக்கு கொரோனா அபாயம் குறைகிறதாம்.

இந்த விஷயத்தில் வெள்ளை ஒயின், சாம்பைனைவிட சிவப்பு ஒயின் நல்ல பலனை தருகிறதாம். அதே நேரத்தில் பீர் அருந்துவது கொரோனா தொற்று அபாயத்தை 700 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறது.

Coronavirus

ஆனால் இது முதல்கட்ட ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், உறுதியானது இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வு முடிவு எப்படி இருந்தாலும், வழக்கம் போல் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியே கடைபிடிப்பது அவசியம்.

அதைவிட தடுப்பூசி போட்டு கொள்வது ஆகிய வழிமுறைகள்தான் கொரோனாவில் இருந்து மனிதனை காப்பாற்றும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

newstm.in

Next Story
Share it