மார்க்ரமுக்கு கொரோனா உறுதி!!
மார்க்ரமுக்கு கொரோனா உறுதி!!

தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரமுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மார்க்ரமுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய எய்டன் மார்க்ரம், கடந்த ஜூன் 2ஆம் தேதி தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியா வந்தபோது, அவர்களுடன் இணைந்து முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன்பிறகே, அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், முதல் டி20 ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதனால், அவருக்குப் பதில் அறிமுக ஆட்டக்காரராக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்கினார்.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 211 ரன்கள் எடுத்த போதிலும், தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் இல்லை எட்டி வெற்றி பெற்றது.
newstm.in

