Theme Check

30 மாணவர்களுக்கு கொரோனா: பள்ளி, கல்லூரிகளுக்கு அலர்ட்..!

30 மாணவர்களுக்கு கொரோனா: பள்ளி, கல்லூரிகளுக்கு அலர்ட்..!

30 மாணவர்களுக்கு கொரோனா: பள்ளி, கல்லூரிகளுக்கு அலர்ட்..!
X

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

200 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நெறிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story
Share it