Theme Check

டெல்லி அணியில் 6 வீரர்களுக்கு கொரோனா!!

டெல்லி அணியில் 6 வீரர்களுக்கு கொரோனா!!

டெல்லி அணியில் 6 வீரர்களுக்கு கொரோனா!!
X

டெல்லி அணியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரரான மிட்சல் மார்ஷ் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15ஆம் தேதி டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை எடுத்தபோது நெகட்டிவ் என வந்தது.

இதனையடுத்து கடந்த 16ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் அந்த அணி பங்கேற்றது. இதையடுத்து நாளை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக, புனே செல்ல இருந்த டெல்லி அணி வீரர்களுக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Coronavirus-Test-Positive

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ்-க்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, ஐபிஎல் நிர்வாகம் வழிகாட்டுதல்களின்படி ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி அணியின் மருத்துவர், அந்த அணியின் சோஷியல் மீடியா குழுவைச் சேர்ந்த ஒருவர், டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டலைச் சேர்ந்த 3 ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it