இந்திய கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா!!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது.
இதைத்தொடர்ந்து கொரோனா தொடர்ந்து உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகிறது. திரைப் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், ருத்துராஜ், நவ்தீப் சய்னி ஆகியோருக்கு தற்போது தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அணி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டியன்ஸ் – இந்தியா இடையிலான தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
newstm.in

