Theme Check

அரசுப் பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா.. பெற்றோர், மாணவர்கள் அச்சம்..!

அரசுப் பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா.. பெற்றோர், மாணவர்கள் அச்சம்..!

அரசுப் பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா.. பெற்றோர், மாணவர்கள் அச்சம்..!
X

தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் சுமார் 40 நாட்களுக்கு பின்னர் நேற்று (1ம்- தேதி) முதல் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் செயல்பட்டு வரும் வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் 43 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள், வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆனாலும், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story
Share it