Theme Check

பிரபல பாடகருக்கு கொரோனா.. இசை நிகழ்ச்சிகள் ரத்து.. சோகத்தில் ரசிகர்கள்..!

பிரபல பாடகருக்கு கொரோனா.. இசை நிகழ்ச்சிகள் ரத்து.. சோகத்தில் ரசிகர்கள்..!

பிரபல பாடகருக்கு கொரோனா.. இசை நிகழ்ச்சிகள் ரத்து.. சோகத்தில் ரசிகர்கள்..!
X

பாப் இசை உலகில் பல அடுக்கடுக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருப்பவர் பாடகர் ஜஸ்டின் பீபர். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கனடிய பாடகரான ஜஸ்டின் பீபர் சிறு வயதிலேயே பல ஹிட் பாடல்களைக் கொடுத்து உலகம் முழுக்க உள்ள ரசிகர்களிடையே பிரபலமானார். பாடுவதைத்தவிர சிறந்த பாடலாசிரியராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஜஸ்டின் பீபருக்கு கடந்த 19-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், லாஸ் வேகாஸில் நடைபெற இருந்த அவருடைய இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மேலும், இவருக்கு அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், நல்ல உடல்நிலையுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Next Story
Share it