Theme Check

பிரபல நடிகருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு!!

பிரபல நடிகருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு!!

பிரபல நடிகருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு!!
X

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 2 நாட்கள் அறிகுறி இருந்ததாகவும், பரிசோதனையில் கொரோனா பாதித்துள்ளது தெரியவந்ததாகவும் கூறினார்.

மேலும் தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


நடிகர் சரத்குமாருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சரத்குமாருக்கு தொற்று ஏற்பட்டதாக அவரது மனைவி ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it