Theme Check

பள்ளிகள் திறப்பால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை..!

பள்ளிகள் திறப்பால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை..!

பள்ளிகள் திறப்பால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை..!
X

அண்டை மாநிலமான கேரளாவில், இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது. அங்கு நேற்று புதிதாக 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் 7.07 சதவீதமாக உள்ளது. இப்போது சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்தது.

மேலும், கடந்த ஒரே வாரத்தில், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு பின் கேரளாவில் இந்த வாரம் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தொற்றின் தீவிரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு செல்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
Both Omicron & Delta variants causing surge in Covid-19 cases: Veena George  | Deccan Herald
இது குறித்து அவர் கூறுகையில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னெச்சரிக்கை முக்கியமானது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் உடல்நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

மேலும், கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது. 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.

மாநிலத்தில் உள்ள மருத்துவ சுகாதார நிபுணர்கள் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

மேலும், கேரளாவில் பருவமழை காலம் தொடங்கியுள்ளதால், காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகளை குறைக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
Share it