Theme Check

விரைவில் தமிழ்நாட்டில் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் சொல்வதென்ன..!!

விரைவில் தமிழ்நாட்டில் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் சொல்வதென்ன..!!

விரைவில் தமிழ்நாட்டில் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் சொல்வதென்ன..!!
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் உயர்ந்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம்பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 சதவீதம் பேர் தான் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, 40 சதவீதத்துக்கும் மேல் ஆஸ்பத்திரிகளில் தொற்று காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டால் தான் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆனால் தற்போது அதுபோன்ற நிலை இல்லை.

எனவே கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா பரவலும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Next Story
Share it