Theme Check

மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. சென்னை ஐஐடியில் 10 பேருக்கு தொற்று உறுதி..!

மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. சென்னை ஐஐடியில் 10 பேருக்கு தொற்று உறுதி..!

மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. சென்னை ஐஐடியில் 10 பேருக்கு தொற்று உறுதி..!
X

சென்னை கிண்டி ஐஐடி-யில் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானதை அடுத்து ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஐஐடி வளாகத்தில் ஆய்வு செய்து பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நெறிமுறையை கடைப்பிடிக்கவும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story
Share it